விருது பரிசுத் தொகையில் தலைமை ஆசிரியர், தெற்கு கோனார் கோட்டை துவக்கப்பள்ளிக்கு தளவாடப் பொருட்களை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராசையாவுக்கு இந்த ஆண்டிற்கான நல் ஆசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக அரசால் விருதுடன் ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டது.
விருது பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் இராசையா ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள 2 கணணி மேஜை, 2 எஸ்டைப் நாற்காலிகளை பள்ளி பயன்பாட்டிற்கு வழங்கினார். இதில் பள்ளி செயலாளர் லால் பகதூர் கென்னடி, ஆசிரியர் ஜெயராணி, தலைமை ஆசிரியர்கள் ஸ்ரீதரன், குணசீலன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


