கால்வாய் கிராமத்தில் தற்போது பெய்த மழையினால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சாலை கள் துண்டிக்கப்பட்டு, அங்கிருந்து மழை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஊருக்குள் தண்ணீர் வந்த காரணத்தினால் தொடர்ந்து மழை தண்ணீரை அகற்றும் பணியில் பஞ்சாயத்து நிர்வாகம் ஈடுபட்டது. இதற்கிடையில் உடைந்த சாலையில் தற்காலிய பைப் போடப்பட்டு அந்த இடத்தில் சாலையை சீர் செய்துள்ளார் கால்வாய் பஞ்சாயத்து தலைவர் சேகர் என்ற சேதுராமலிங்கம்.அவ்விடத்தில் நிரந்தர பாலம் கட்ட வேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த்தராஜ் அவர்களிடம் அவர் கோரிக்கை வைத்தார். எனவே அந்த இடத்தினை பார்வையிட ஊர்வசி அமிர்தராஜ் கால்வாய் கிராமத்துக்கு வந்தார். அவர் மழை வெள்ள சேதம் நடந்த இடத்தினை பார்வையிட்டார். கால்வாய் குளத்துக்குள் இருந்து தண்ணீர் ஊருக்குள் வாரமல் இருக்க ஆலோசனை செய்தார். அவருடன் ஸ்ரீவைகுண்டம தாசில்தார் ராதாகிருஷ்ணன், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி, கால்வாய் பஞ்சாயத்து தலைவர் சேகர் என்ற சேதுராமலிங்கம், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர் புங்கன், புளியங்குளம் சித்தார்த், தூதுகுழி நயினார், கருங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன்கிருஷ்ணன் உள்பட பலர் உடன் வந்தனர்.


