கோவில்பட்டியில் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு நடந்தது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., கல்லூரிகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டி கடந்த 28ம் தேதி பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடந்தது. இதில் கோவில்பட்டி எஸ்.எஸ் டி.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் பாட பிரிவு இரண்டாமாண்டு மாணவன் கோபி தர்ஷன் 67கிலோ எடை பிரிவில் 263 கிலோ பளு தூக்கி தங்க பதக்கம் பெற்று அகில இந்திய அளவில் நடைபெறும் பளுதூக்கும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மேலும் இதே கல்லூரியை சேர்ந்த கணினி பாடபிரிவு முதலாமாண்டு மாணவன் வில்வ ஆனந்த் 89 கிலோ பாட பிரிவில் 255 கிலோ பளுதூக்கி தங்கம் பதக்கம் பெற்றுள்ளார்.
பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற எஸ்.எஸ்.எம். கல்லூரி மாணவர்களை கல்லூரி செயலாளர் கண்ணன் பரிசுகளை வழங்கி பாராட்டினர். இதில் கல்லூரி பொருளாளர் வி.எஸ்.எம் கண்ணன்,உறுப்பினர் அருண், கல்லூரி முதல்வர் செல்வராஜ், உடற்கல்வியியல் துறை தலைவர் செல்லத்துரை கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் வாழ்த்தினர்.