வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலய 74- வது ஆண்டு ஆலயப்பிரதிஷ்டை, அசன பண்டிகை விழா 5 நாட்கள் நடந்தது.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம், கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றம், மூக்குப்பீறி சேகரம்வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலய 74-வது ஆண்டு ஆலயப் பிரதிஷ்டை, அசன பண்டிகை விழாவினை முன்னிட்டு முதல்நாள் மாலை ஆராதனை முடிவு பெற்றதும் ஊரைச் சுற்றி ஆயத்த ஜெப பவனியும் நிறைவாக ஒய்வு நாள் பாடசாலை குழந்தைகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. 2-வது நாள் காலை பரி.நற்கருணை ஆராதனையும்,இரவுமாலை ஆராதனை முடிந்ததும் கன்வென்ஷன் கூட்டம் நடைபெற்றது.
இதில் நாலுமாவடியைச் சேர்ந்தசகோ.சந்தானம் தேவ செய்தி கொடுத்தார்.3- வது நாள் மாலை ஆராதனை முடிந்ததும் கன்வென்ஷன் கூட்டம் நடந்தது. இதில் நாலுமாவடியைச் சேர்ந்த சகோ.ஜெபஸ்டின் தேவ செய்தி கொடுத்தார்.4- வது நாள் இரவு பண்டிகை ஆயத்த ஆராதனை நடந்தது. இவ்வாராதனையில் சபை குருவும் மூக்குப்பீறி சேகர தலைவருமான ஞானசிங் எட்வின் தலைமை வகித்து அருட்செய்தி வழங்கினார்.
சபை ஊழியர் ஜாண் வில்சன் முன்னிலை வகித்தார். நிறைவுநாளன்று அதிகாலையில் ஆலயப் பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையும், பரி. நற்கருணை ஆராதனையும் சபைகுரு ஞானசிங் எட்வின் தலைமையில் சபை ஊழியர் ஜாண் வில்சன் முன்னிலையில் நடைபெற்றது.ஓய்யான்குடிசேகரகுரு ரூபன் மணிராஜ் தேவசெய்தி கொடுத்தார்.ஆராதனை முடிந்ததும் அசன வேலைக்கான ஆயத்த ஜெபம் நடைபெற்றது. மாலையில் அசன விருந்து நடைபெற்றது. முடிவில்ஸ்தோத்திர ஆராதனை நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளைமூக்குப்பீறி சேகர தலைவர் ஞானசிங் எட்வின் தலைமையில் சபை ஊழியர் ஜாண் வில்சன் முன்னிலையில்வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயபரிபாலனக் கமிட்டி நிர்வாகிகள், ஆலய சேகர கமிட்டி உறுப்பினர்கள், திருச்சபையார்கள் இணைந்துசெய்திருந்தனர். படம் விளக்கம்: வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலய பிரதிஷ்டைப் பண்டிகை, அசனப் பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து பரிமாறப்பட்டது.


