தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள பாண்டியர்களின் தலைநகரமாகவும் துறைமுகம் அமைந்த இடமாகவும் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க கிராமமாக கருதப்படும் கொற்கை கிராமத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது.
இந்த அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கொற்கையில் அகழாய்வு பணிகள் நடந்த இடத்தினை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதல்வர் டாக்டர் நாகராஜன் அறிவுறுத்தலின்படி, வரலாற்று துறையிலிருந்து வரலாற்றுதுறை தலைவர் டாக்டர் தேவராஜ் தலைமையில் சுமார் 30 மாணவ மாணவிகள் அகழாய்வை பார்வையிட நேற்றைய தினம் வருகை தந்தனர்
அவர்கள் கொற்கையில் அகழாய்வு பணிகள் நடந்த இடத்தினை பார்வையிட்டனர். அகழாய்வு பொறுப்பாளர்கள் ஆசைதம்பி, காளீஸ்வரன் ஆகியோர் அகழாய்வு நடைபெற்ற இடத்திற்க்கு அழைத்து சென்றனர். அகழாய்வில் கண்டறியப்பட்ட பழங்கால மண்பாண்டங்கள், ஓடுகள், சங்குகள், எலும்புத்துண்டுகள், முதுமக்கள் தாழி, சதுரவடிவிலான செங்கல் கட்டுமானம் செங்கல் கட்டுமானத்தில் உள்ளே இருந்த கொள்கலன், 9அடி அடுக்குள்ள வடிகட்டும் சுடுமண்குழாய், பெண் உருவம் கொண்ட சுடுமண் பொம்மை போன்றவற்றை காண்பித்தனர்.
இதனை பார்வையிட்ட மாணவ மாணவிகள் ஆய்வுகள் குறித்த விளக்கங்களை களப்பணியாளர்களிடமிருந்து கேட்டறிந்தனர். அகழாய்வு பொறுப்பாளர் ஆசைதம்பி பழங்கால மக்கள் படிப்பபறிவு கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் அதிலுள்ள எழுத்து வடிவ முறை மேலே நாட்டுகளுடன் வணிக தொடர்பு போன்றவற்றை விளக்கி கூறினார். காளீஸ்வரன் அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை எவ்வாறு ஆவணப்படுத்துதல் பற்றி விளக்கமாக பயிற்சி அளித்தார்.


