ஆழ்வார்திருநகரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸ் வாகனம் அர்ப்பணிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையிலுள்ள செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், திருச்செந்தூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் வாகன சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் வாகனம் அர்ப்பணிக்கும் விழா ஆழ்வார்திருநகரியில் நேற்றைய தினம் நடந்தது.
விழாவிற்கு, மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அஸாருதீன், பொருளாளர் நாசர்அலி, துணை செயலாளர்கள் சிக்கந்தர் மீரான், இமாம்பரீத் மருத்துவ அணி செயலாளர் முஹம்மது ரஷீத்காமில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆழ்வை கிளைத் தலைவர் பந்தேநவாஸ் வரவேற்றார்.
விழாவில், மாநில செயலாளர்கள் செங்கோட்டை பைசல், செய்யது அலி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் விபத்து உள்ளிட்ட அவசர காரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனம் செயல்படும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர். ஆழ்வை சப் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் ஆம்புலன்ஸ் வாகன சேவையை தொடங்கி வைத்தார். இதில், கிளை நிர்வாகிகள் ரியாஸ், சுலைமான், கமால்தீன் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


