1864 – இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளி நகரை முற்றாக சேதப்படுத்தியது. 60,000 பேர் கொல்லப்பட்டனர்.
1886 – தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தென்னாபிரிக்காவின் ஜோகானஸ்பேர்க் நகரம் உருவாக்கப்பட்டது.
1903 – சாமுவேல் கிரிஃபித் ஆஸ்திரேலியாவின் முதலாவது தலமை நீதிபதியாக நிமனம் பெற்றார்.
1905 – வில்பர் ரைட் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார்.
1910 – போர்த்துக்கலில் அரசாட்சி முடிவுக்கு வந்து குடியரசு நாடாகியது.
1915 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா போரில் இறங்கியது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஜெட் விமானம் ஒன்றை முதற் தடவையாக கனேடிய விமானப் படையினர் பிரான்சில் சுட்டு வீழ்த்தினர்.
1944 – பிரான்சில் பெண்கள் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டனர்.
1948 – துருக்மெனிஸ்தான் தலைநகர் அஷ்கபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட்டாதில் 110,000 பேர் கொல்லப்பட்டனர்.
1962 – முதலாவது ஜேம்ஸ் பொண்ட் திரைப்படமான டொக்டர் நோ ஐக்கிய இராச்சியத்தில் வெளிவந்தது.
1974 – இங்கிலாந்தில் ஐரியக் குடியரசு இராணுவத்தினர் மதுபான சாலை ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். 65 பேஎர் காயமடைந்தனர்.
1978 – ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
1987 – விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.
1991 – இந்தோனீசியாவின் இராணுவ விமானம் ஒன்று ஜகார்த்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – மேற்கு லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
2000 – சேர்பியாவில் சிலோபதான் மிலோசேவிச்சுக்கு எதிரான மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


