தமிழ்நாடு ஹாக்கி, ஹேண்ட்பால் அணிக்கு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் இந்திய தேசிய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்தும் மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொள்ளும் 17 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு ஹாக்கி அணியின் தேர்வு தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. அதே போல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு ஹெண்ட்பால் அணியின் தேர்வு நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டதில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு ஹாக்கி அணி மற்றும் ஹேண்ட்பால் அணிக்கு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் நவிநேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார். 17 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு அணி மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு ஹெண்ட்பால் அணியின் தேர்வில் மாணவர் என்.மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தமிழ்நாடு ஹெண்ட்பால் அணி அரியானாவில் நடைபெறும் தேசிய அளவிலான ஹெண்ட்பால் போட்டியில் கலந்து கொள்ள உள்ளது.
தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 2 மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் முத்துகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் சசிக்குமார், சுந்தரராஜன், மகேஸ்வரி, ராமலட்சுமி ஆகியோரை நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், உறவின்முறை சங்க செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ்குமார் , பள்ளிசெயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், தலைமை ஆசிரியர் ஜான்கணேஷ் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.


