
சாத்தான்குளம் வட்டாரம் சங்கரன் குடியிருப்பு கிராமத்தில் இயற்கை வேளாண்மை பயிற்சி நடைபெற்றது வட்டார தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார் செயலாளர் புதுக்குளம் ஜேக்கப் முன்னிலை வகித்தார். இயற்கை விவசாயி வசவப்புரம் கிருஷ்ணமூர்த்தி இயற்கை வேளாண்மையில் சாகுபடி நுட்பங்கள் மகசூல் அதிகரித்தல் மற்றும் வருமானத்தை பெருக்குதல், இயற்கை உர பயன்பாடு, நஞ்சு இல்லா உணவு ஆகியவற்றின் செயல் விளக்கத்தினை பயிற்சியுடன் அளித்தார். விவசாய ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைப்பது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அங்கமுத்து பேசினார் நீர் பயன்பாடு மற்றும் மேலாண்மை பற்றி சுகாதார பயிற்சியாளர்கள் பேசினார் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து செந்தமிழ் அறக்கட்டளை ஆலோசகர் முனைவர் வே. ஆனந்தன் கருத்துரை வழங்கினார். இப்பயிற்சியில் ஆழ்வார்திருநகரி வட்டார தலைவர் கரும்பன் மளவராய நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், மளவை ராகவன், சங்கரன் குடியிருப்பு தினகர், தர்மலிங்கம், தங்கவேல், ஜெயராஜ், பழனி, தங்கசாமி, வேலு, மகாலிங்கம், பட்டு ராஜ், டேவிட், பாண்டி மற்றும் பெண் விவசாயிகள் சித்ரா ஞானப்பூ, சரோஜா, ராதா, பிச்சைக்கனி, மகாலட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்