தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமையவுள்ள தனியார் நிறுவனத்திற்கு தேவையான நீர் ஆதாரத்திற்காக தேவையான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் அள்ளிகுளம் சிப்காட் பகுதியில் அமையவுள்ள ஏப்ரல் பைபர் ரிசோர்ஸ் கம்பெனி நிறுவனத்திற்கு தேவையான நீர் ஆதாரத்தினை தூத்துக்குடி மாநகராட்சி எஸ்.டி.பி பிளான்டில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் குழாய் அமைக்கப்படவுள்ள பணியினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகள் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர், பக்கில் ஓடை விரிவாக்கப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.


