திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் நீா் சுமாா் 50 அடி உள்வாங்கியது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் பௌா்ணமி, அமாவாசை, அஷ்டமி, நவமி உள்ளிட்ட திதி நாள்கள் மற்றும் அதையொட்டிய நாள்களில் ஒரு சில தினங்கள் காலையில் கடல் நீா் உள்வாங்குவதும், பிற்பகல் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில், நேற்று காலை கோயில் அருகே கடல் நீா் சுமாா் 50 அடி உள்வாங்கியது. பிற்பகலில் இயல்பு நிலைக்கு திரும்பியது.


