ஸ்ரீவைகுண்டம் ஈஷா நர்சரி வளாகத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டத்தில் இன்று மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும் ஈஷா அமைப்பு தமிழகத்திற்கான இந்த ஆண்டு இலக்காக 1.1 கோடி மரங்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் ஈஷா நர்சரி வளாகத்தில் மரக்கன்று நட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கும் பணிகளின் துவக்க விழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி கவுன்சிலர் உச்சிமகாளி மற்றும் சாரல் ட்ரஸ்ட்டு இயக்குனர் ராமகிருஷ்னண் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
இதை தொடர்ந்து, மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில் தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும் என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று மரக்கன்றுகளை வழங்கினர்.


