ஆதி குமரகுருபரர் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் “ஆதி குமரகுருபரர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். ஐந்து வயது வரை பேசும் திறன் அற்று இருந்தார் பின்பு இவரின் பெற்றோர் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று வழிபடப் பேசும் திறன் வாய்க்கப் பெற்றார்.
அந்த வயதிலேயே கந்தர் கலி வெண்பா என்னும் பாடலைத் திருச்செந்தூர் முருகக் கடவுளைப் போற்றிப் பாடியுள்ளார். சில வருடங்களுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். மேலும் மீனாட்சி அம்மனைப் போற்றி மதுரைக் கலம்பகம், மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். பல்வேறு ஆண்மீக நூல்களை தமிழ் நூல்களையும் இயற்றி தமிழ் சிறப்பு வாய்ந்த, ஆதி குமர குருபரருக்கு மணிமண்டபம் அமைக்கவும், அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாகவும் அறிவிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


