தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க பாடுபட்டு வரும் மதர் சமூக சேவை நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றுத் துறை சார்பில் தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருதுடன் ஒரு லட்சம் பரிசு தொகை வழங்கி அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டினார்
தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருது பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றுத் துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்மாதிரியான பங்களிப்பு வழங்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2022 – 2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருதினை சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொடர்பான பணி செய்யும் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இவ் விருதுதினை பெற தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள்,பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள்,தொழிற்சாலைகள் விண்ணப்பித்தனர். இதில் மதர் சமூக சேவை நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 19 ஆண்டுகளாக பெண்களின் மேம்பாட்டுக்காகவும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க கடந்த 5 ஆண்டுகளாக சமூக அக்கறையுடன், சேவை மனப்பான்மையோடு, நிதி உதவி எதுவும் பெறாமல் , தமிழர்களின் தேசிய மரமான பனை மரத்தை அழிவிலிருந்து பாதுகாக்கவும், வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடியின் மிக தீவிரமான செயல்பாட்டினால் தூத்துக்குடி மாவட்டத்தில் சூறாவளி, புயல் போன்ற இயற்கை சிற்றங்களை தடுக்க கடற்கரை பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதிகளில், மண்ணரிப்பை தடுத்து கரையை வலுப்படுத்த, ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்காங்கரை, ஓரங்களிலும், நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு புறம்போக்கு இடங்களிலும், சாலையை பாதுகாக்க சாலை ஓரங்களிலும் விரும்பி கேட்ட தனியாக இடங்களிலும் தொடர்ந்து பனைமர விதைகளை விதைத்து வருகின்றனர்.
மேலும் மரக்கன்று நட்டு பராமரித்தல், விதைப்பந்து விதைத்தல், சுற்றுச்சூழல் சம்பந்தமாக பள்ளி, கல்லூரி, சுய உதவி குழு பெண்கள், பொது மக்களுக்கு, முகாம், கருத்தரங்கு, மாநாடுகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தல், சுற்றுச்சூழலை பாதிப்பு அடைகின்ற செயலில் ஈடுபடுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற சேவை பணிகளை மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார். இந்த சேவைகளை அங்கீகரித்து, ஊக்கப்படுத்து விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான ஒரு மாவட்ட அளவிலான விருது குழுவினரால் மதர் சமூக சேவை நிறுவனம் தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. விருது வழங்கும் விழா ரோச் பூங்கா அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கி. செந்தில்ராஜ் இ ஆ ப தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், உதவி ஆட்சியர் கௌரவ் குமார் முன்னிலை வகித்தனர். விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மதர் சமூக சேவை நிறுவனத்திற்கு மகளிர் நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருதினையும், ஒரு லட்சத்திற்கான காசோலையையும், சான்றிதழை இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடியிடம் வழங்கி பாராட்டினார்.
விழாவில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ஜோமஸ் ஜோசன், ரங்கசாமி உதவி பொறியாளர்கள் முரளி கண்ணன், பிரவீன் பாண்டியன் விளாத்திகுளம் ரேஞ்சர் கவின், திருச்செந்தூர் ரேஞ்சர் கனிமொழி உள்பட பல கலந்து கொண்டனர். தமிழ்நாடு கிரில் சாம்பியன் விருது பெற்ற டாக்டர் எஸ் ஜே கூறியதாவது: இந்த விருது கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எங்கள் சேவை ஊக்கப்படுத்துவதாகவும், ஒரு கோடி பனை மர விதை நடும் பணியில் உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு இது கிடைத்துள்ள ஒரு லட்சம் பரிசுத் தொகையை பனை விதை நடுவதற்கு தொடர்ந்து பயன்படுத்துவோம் எனக் கூறினார்


