திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த டூவீலர் மெக்கானிக், முருகன் என்பவர் மனைவி தமிழ்ச்செல்வி, மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வல்லநாட்டு கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த மே 22 ஆம் தேதி முருகன் வேலை முடித்து விட்டு, திருநெல்வேலியிலிருந்து வல்லநாட்டிற்கு டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது உத்தமபாண்டியகுளம் அருகே பின்னே வந்த வாகனம் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின்னர் அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகிறது.
இந்த நிலையில் வறுமையில் வாடும் முருகனின் குடும்பத்திற்கு துளிர் கரம் அறக்கட்டளை மற்றும் திருநெல்வேலி மாவட்ட பாளை அனைத்து மோட்டார் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில், இன்றைய தினம் அவரது இல்லத்திற்கு சென்று குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆதரவற்ற இரு குழந்தைகளின் படிப்பு மற்றும் குடும்ப செலவிற்காக நிதி உதவியாக துளிர் அறக்கட்டளை சார்பாக 11,500 ரூபாயும், திருநெல்வேலி மாவட்ட பாளை அனைத்து மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 39 ஆயிரம் ருபாய் என மொத்தம் 50,500″ ரூபாயை குடும்பத்தாரை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் துளிர் கரம் அறக்கட்டளை பொதுச் செயலாளர், அரியமுத்து, மாநிலத் துணைத்தலைவர், அருணாசலகுமார், உயர்மன்ற குழு உறுப்பினர்கள், முத்துபட்டன், சங்கர், பரமசிவன், மாநில அமைப்பு செயலாளர் மகேஷ், மாநில பொருளாளர் வீரமணிகண்டன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சின்னதுரை, மாநில இளைஞரணி செயலாளர் மணிபாண்டியன், திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உச்சிமாகாளி, கந்தன், வல்லநாடு பூல்பாண்டியன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


