தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்குகாரசேரி ஊராட்சியில் இன்று உலக சுற்று சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் கணேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறியாளர், கிராம வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.


