கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ‘இலக்கியச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது.
காப்புக்காடு தொல்காப்பியர் கழகத்தின் 34-ஆம் ஆண்டு விழா, கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடந்தது. விருது வழங்கும் இவ்விழாவிற்குத் தொல்காப்பியர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் பார்த்திவபுரம் பாபு தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுரேந்திரன் வரவேற்புரையற்றினார். தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் பி. கே. சிந்துகுமார் விருதுகளை வழங்கினார்.
தொல்காப்பியர் கழகத் தலைவர் முளங்குழி பா. லாசர் விருதாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ‘இலக்கியச் செம்மல்’ விருதும், வின்சென்ட் அவர்களுக்கு ‘தொல்காப்பியர்’ விருதும், மார்த்தாண்டம் ஞானதீபம் கல்லூரித் தாளாளர் தோமஸ் ராஜ் அவர்களுக்கு ‘நற்கல்வி நாயகன்’ விருதும், எழுத்தாளர் அரிகிருஷ்ணதாஸ் அவர்களுக்கு ‘நற்பணிச்செம்மல்’ விருதும், த. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ‘கல்விச்செம்மல்’ விருதும் வழங்கப்பட்டன. பேராசிரியர் தே. பிரேம் ஆனந்த் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளைக் காப்புக்காடு தொல்காப்பியர் கழகத் தலைவர் முளங்குழி லாசர் தலைமையில் கழகத்தினர் செய்திருந்தனர்.


