முதலமைச்சர் காவலர் பதக்கம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை பெண் தலைமை காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
தூத்துக்குடி ஆயுதப்படையில் பணியாற்றிவரும் பெண் தலைமை காவலர் ஜெயா என்பவரின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கிகரித்து 2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கத்தை கடந்த 26.01.2023 அன்று வழங்கி கௌரவித்தது. பதக்கம் பெற்ற பெண் தலைமை காவலர் ஜெயா இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நேரில் சந்திந்து வாழ்த்து பெற்றார். அவரை பாராட்டி மென்மேலும் சிறப்பாக பணிபுரிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்தினார்.


