நெல்லையில் இருந்து முக்கூடல் வழியாக அம்பாசமுத்திரம் செல்லும் வழித்தடத்தில் உள்ளது பள்ளக்கால் பொதுக்குடி, அமைதியை தத்தெடுத்துக் கொண்ட இவ்வூரின் பெயர் புராண காலத்தில் ஆவாரங்காடு என்று வியாச பகவான் சிறப்பித்துள்ளார். உத்தர வாஹினியாக ஓடும்{ கடனா நதி மற்றும் ராமநதி } இணைந்து வருகிற கரையில் அமைந்துள்ள இவ்வூரில் பழமை மிக்க யோக நரசிம்மர் கோயில் உள்ளது. இக்கோயில் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது கூடுதல் சிறப்பாகும். நாயக்க மன்னர்கள் காலத்தில் புகழ் பெற்றிருந்த இக்கோயிலை கற்றி வயல் வெளிகளும் வாழைத் தோப்புகளும் உள்ளன. இந்திரா காலனியில் இருந்து மண் பாதையில் பின் கான்கிரீட் பாதை வழியாக சென்றால் இக்கோயிலை அடையலாம்.
கருவறை, அர்த்த மண்டபம். மகாமண்டபம். முன் மண்டபம். ஒரு சுற்று பிரகாரம் என எளிமையாக கோயில் விளங்குகிறது இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன் னடம், மலையாளம், இந்தி என பல மொழி பேசும் பல குடும்பங்களுக்கும் புலம் பெயர்ந்த வெளியூர் மற்றும் வெளி நாட்டு பக்தர்களுக்கும் இக்கோயில் நரஸிம்ஹ ஸ்வாமி குலதெய்வமாக உள்ளார்.பொதுவான பக்தர் களுக்கும் வழிபாட்டுக் கோயிலாகவும் உள்ளது. இந்த கோயில் அருகில் இந்த கோயிலை குலதெய்வமாக கொண்ட பக்தர்களின் முன்னோர்கள் வாழ்ந்து இருந்தார்கள் வீடுகளும் இருந்தது காலப்போக்கில் எல்லாம் போய்விட்டது.
1999ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்த இக்கோயிலில் வைணவ முறைப்படி திருப்பணிகள் செய்யபட்டு 2023 ல் சம்ரோஷனம்(கும்பாபிஷேகம் )நடைபெற்றது. இதற்கான திருப்பணிகளை செய்ய யோக நரசிம்மரை குல தெய்வமாக கொண்ட குடும்பத் தினர் முன் வந்து நடத்தினர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் இதற்க்கான வழிமுறைகளை செய்து வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
பிரதோஷ காலத்தில் வழிபாடுகள் நடைபெறும் நரசிம்மர் கோயில்
இங்குள்ள யோக நரசிம்மருக்கு எல்லா சிவா லயங்களிலும் சைவ முறைப்படிபிரதோஷ காலத்தில் வழிபாடுகள் நடப்பதைப் போல [அதாவது சந்திரபிரபை 13வது த்ரயோதசி நாட்களில் ) பிரதோஷ வழிபாடுகள் நடப்பது இங்கு சிறப்பாகும்.நித்ய பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
[ காலை 10:00am மணி முதல் 12:00pm மணி வரை ]
பழமை மிக்க இக்கோயிலில் எழுதந் தருளி உள்ள யோக நரசிம்மருக்கு யோகானந்தநரசிம்மர் என்ற திருநாமமும் உண்டு. காரணம் ஹிரண்ய வதம் முடிந்ததும் பிரகலாதனுக்கு நரசிம்மர் சில யோக முத்திரைகளை கற்றுத் தந் தார். அந்த மூத்திரைகளில் ஒன்றை இங்குள்ள இறைவன் வெளிக்காட்டி இருப்பதால் இவருக்கு யோகானந்த நரசிம்மர் என்ற திருநாமம் வந்ததாக கூறுவர்.இவரது திருமேனி உளி கொண்டு செதுக்கிய முற்றுப் பெற்றதிருமேனியைப் போல இல்லாமல் முற்றுப் பெறாத சுயம்பு மூர்த்தமாக இருப்பதை காணலாம் இது குறித்து ஒரு ரசமான வரலாறு கூறப்படுகிறது.
முன்பு இப்பகுதியில் மகான் ஒருவர் வாழ்ந்து வந்தார். ராமன் மீது பக்தி மிகுந் தவர்.அவரது அருட் சொல்லும் விழிகளும் அறிவு பூர்வமான வார்த்தைகளும் இப்ப குதி மக்களை கவர்ந்தது. எனவே அவரை அனை வரும் ஒரு ஞான குருவா கவே ஏற்றுக் கொண்டனர். ஒருநாள் அவர் ராமபிரானை வேண்டி தியானம் செய்தார். அவரை சோதிக்க நினைத்த பரந்தா மன் அவரது கண் முன்னே நெருப்பின் உக்கிரமான கண்களுடன் நீண்ட நகங்களுடன் நரசிம்ம வடிவத்தில் காட்சி தந்தார்.
இது மகானின் மனதில் நிறைவு தரவில்லை. நான் வேண்டியது ராமனின் தரிசனத்தை அல்லவா ? சிங்க முகத்துடன் கொடிய நகங்களு டன் கொடூரமாக காட்சி தரும் நீ யார் என்று பரத் தாமனிடம் கேள்வி கேட்டார்.அதற்கு பரந்தா மன் ராமனும் நானே… நரசிம்மனும் நானே இந்த இடம் நரசிம்ம ஷேத்திரம். இந்த இடத்தில் என்னைத்தவிர வேறு யாரையும் தரிசிக்க முடி யாது என்று விளக்கம் அளித்தார்.
இதை மகான் ஒப்புக் கொள்ளவில்லை என் ராமன் நாணேந்திய வில்லுடன் இருக்கும் பேரழ கன். உன்னைப் போல நீண்ட நகங்களையும் கொடிய ஆயுதங்களையாம் தாங்கி கொடூரமாக இருக்கமாட்டான்.நான் என் ராமபிரானையே காண விரும்புகிறேன். நீ செல்லலாம் என்றார். அதற்கு பரந்தாமன் மகானிடம் கூறினார். ராமின் மீது உனக்கு இருக்கும் பக்தியைக் கண்டு உம்மை பாராட்டுகிறேன். என்னை நன்றாக கவனி என்றார்.அப்போது மகானின் திருப்திக்காக பரந்தாமன் அந்த மகானுக்கு கோரைப் பற்கள் இல்லாமலும் கொடிய நகங் கள் இல்லாமலும் சாந்த சொரூபியாக யோக நிலையில் யோக நரசிம்மராக திருக்காட்சி தந் தார். இந்த காட்சி மகானின் கண்களுக்கு ஹரி யும் ஹரனும் யோக நிலையில் உள்ளதைப் போல தெரிந்தது.பின் மகான் தன் மனதை ஒரு நிலைப்படுத்தியபோது இது பரந்தாமனின் திரு விளையாடல் என்பதை உணர்ந்தார்.
அப்போது பூமியில் இருந்து யோக நிலையில் ஒரு நரசிம்மரின் சிலா ரூபம் தோன்றியது. அர்ச்சாவதரா மூர்த்தியாக சுயம்பு வடிவில் தோன் றிய இறைவனுக்கு அவ்விடத்திலேயே ஒரு கோயிலை அனைவரும் பார்க்கும் படியாக அமைத்து வழிபட்டு வந்தார். அவரைத் தொடர்ந்து வழிபட்ட பக்தர்களும் யோக நரசிம் மரை தாங்கள் குல தெய்வமாக ஏற்று வழிவழி யாக வழிபட்டு வருகின்றனர்.
கோயிலின் கருவறையில் உயர்ந்த பீடத்தில் யோக நரசிம்மர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி வேண்டுவோருக்கு வேண்டுவன செய்து வருகிறார்.
இவரது பின் இருகரங்களில் சங்கும் சக்கரமும் உள்ளன. இவர் இருகால்களையும் மடித்து குத்துக்காவலிட்டு முன் இரு கரங்களையும் தரையை நோக்கி தொங்கவிட்டபடி உள்ளார்.இவரை கண் மூடி தியானம் செய்தால் சிவ விஷ்ணு வடிவத்தில் இருப்பது போன்ற பிரமிப்பு ஏற்படும். தெய்வீகமும் சாந்தமும் குடி கொண்டிருக்கிறார். இவர் அருகே நவநீத கிருஷ்ணரும் உள்ளார்.
இக்கோவிலில் ஜீர்ணோத்தரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமானது உத்திராயணம் ஆனி மாதம் 13ஆம் நாள்(28/06/2023) புதன் கிழமை சுக்லபக்ஷ தசமி திதி சித்திரை நட்சத்திரம் அன்று வெகு விமரிசையாக நடை பெற்றது.
நித்திய பூஜை மற்றும் சிறப்பு பூஜை விவரங்கள்
*ஆண்டுதோறும் ஆனி மாதம் சித்திரை நட்சத்திர அன்று வர்ஷாபிஷேகம் நடைபெறும்.
பிரதி மாதம் தோறும் * சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் மற்றும் திருவாராதனை நடைபெறும்.
*பிரதோஷ தினத்தன்று சிறப்பு திருமஞ்சனம் மற்றும் திருவாராதனை நடைபெறும்.
பிரதோஷ தினத்தன்று மற்றும் மாலை நடை திறக்கப்படும்.
நேரம்:{ 05:00pm to 07:00pm }
*நித்திய பூஜை நடை திறக்கும் நேரம்
{ 10:00am to 12:00pm } தொடபுக்கு:9789877245
94889 21894


