தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட இலக்கிய கலை மற்றும் இசை சங்கத்தின் உறுப்பினர்களுக்கான பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.
அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் வருகிற ஏப்ரல் 21 முதல் மே 1 வரை 4வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது இத்திருவிழாவில் கடைசி நான்கு நாட்கள் நெய்தல் விழா நடத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த கலைநிலம் வாழ்வு சார்ந்த புகைப்பட கண்காட்சியும் உணவு திருவிழாவும் நடக்கிறது. மேலும் புகைப்படக் கலைஞர்களுக்கு புகைப்படக் கண்காட்சி போட்டியும் நடக்கிறது.
கோவில்பட்டி கி.ரா.நினைவரங்கத்தில் தொடர்ந்து கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அந்த அரங்கம் தயாராக உள் ளது. ஆர்வம் இருப்பவர்கள் அங்கு நிகழ்ச்சிகளை நடத்த லாம். முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் இசை, கலை, இலக்கியத்திற்காக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சங்கத்தில் மாவட்ட கலெக்டர், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்
தாளர் சோ.தர்மன், முத்தாலங்குறிச்சி காமராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மாணவர்க ளுக்கு, இளைஞர்களுக்கு, இங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், நம்முடைய கலைகள், வாழ்வியல் முறைகள் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்கும். இங்கே இருக்கக்கூடிய எழுத்தாளர்களைக்கொண்டாடக் கூடிய ஒரு சங்கமாக இது செயல்படும். ஆய்வாளர்களுக்கும் உதவி செய்யக்கூடிய சங்கமாகவும் செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், கூடுதல் ஆட் சியர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், பெரியசாமி அறக்கட்டளை நிறுவனர் பா.ஜீவன் ஜேக்கப், உள்பட பலர் கலந்துகொண்டனர்.


