தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் பழங்கால பொருட்கள் மற்றும் பழங்கால நாணயங்கள் கண்காட்சி நடந்தது.
இதில் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் சேகரிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், பானைகள், பழைய கற்கால கருவிகள், இடைக்கால கருவிகள், புதிய கற்கால கருவிகள், வெண்கல பொருட்கள், செம்பு பொருட்கள், சேர, சோழ, பாண்டியர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், கடிகாரங்கள் புகைப்படக் கருவிகள், பழங்காலத்தில் வீடுகளில் பயன்படுத்திய பொருட்கள் என பழைய கற்காலத்திலிருந்து 1950 வரை உள்ள மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதை, குமரகுருபர சுவாமிகள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர்.


