தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்டம் லீக் போட்டிகள் தருவை மைதானத்தில் இன்று தொடங்கியது.
தூத்துக்குடியில் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான லீக் போட்டிகள் இன்று தருவை மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் எங்கஸ்டர் அணியினரும், SDAT தூத்துக்குடி அணியினரும் மோதினர்.மாவட்ட விளையாட்டு அலுவலர் ரத்தினராஜ், புனித லசால் பள்ளியின் தாளாளர் அருட்சகோதரர் பெர்டினாண்ட், தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் ஜான் பால் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கால்பந்தாட்ட வீரர் வால்டர், வீரர்களை சிறப்பு விருந்தினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு கால்பந்தாட்ட கழகத்தின் முன்னாள் தலைவரும், மாவட்ட தலைவருமான தொழிலதிபர் சேசையா வில்லவராயர், செயலாளர் நிக்கோலாஸ் மற்றும் கழக உறுப்பினர்கள் இப்போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற நடுவர்கள் இப்போட்டியை வழிநடத்தினர். இந்த லீக் போட்டிகள் தூத்துக்குடி, திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம் மற்றும் காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.


