முனைவர் ஜான்சி பால்ராஜ் எழுதிய தேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார்மைக்கேல் என்ற நூல் வெளியிட்டு விழா நெல்லை புத்தக கண்காட்சி மேடையில் நடந்தது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். லயன்ஸ் தம்பான்,எழுத்தாளர் சிற்பு பாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் இராமச்சந்திரன் நூலை வெளியிட கண்ணநல்லூர் சந்தோஷ ராஜதுரை பெற்றுக்கொண்டார். கோமதி கிருஷ்ண மூர்த்தி தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் ஜான்சிபால்ராஜ் ஏற்புரை வழங்கினார். எழுத்தாளர் நாறும் பூநாதர், கணபதி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


