அதீத கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி நிவாரண பணி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி அர்ப்பணிப்புடனும், தியாக மனப்பான்மையுடனும், முழுமையாக தன்னை ஈடுபடுத்திக். கொண்டு சேவையாற்றிய அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா பாலமுருகனுக்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் பெய்த அதீத கன மழை மற்றும் வெள்ளத்தினால் தாமிரபரணி ஆறு மற்றும் “கடலுக்குப் பாதி கடம்பா” என்று சொல்லப்படும் கடம்பாகுளம் உட்பட பல்வேறு குளங்கள் உடைந்து வெள்ள நீர் அனைத்து விவசாய பயிர் விதைத்திருந்த நிலங்களையும், அடிப்படை போக்குவரத்து வழித்தடங்களையும், தெருக்களில் புகுந்து, அனைத்து குடியிருப்புகளையும் சேதப்படுத்தியது இதனால் கிராமங்களுக்கான சாலை துண்டிக்கப்பட்டதால் ஆங்காங்கே உள்ள கிராமங்கள் தனி தீவுகள் போல் காட்சியளித்தது. இதைக் கண்டு பதறிப்போன அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா மற்றும் அவரது கணவர் பாலமுருகன் துடி துடித்தனர். உடனே தனக்கு சொந்தமான டிராக்டர் வண்யை தானே எடுத்து ஓட்டி சென்று பாதிக்கப்பட்ட மக்களை தேடி கிராமங்களுக்கு சென்று கிராமங்களில் உள்ள முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என தரப்பட்ட மக்களையும் டிராக்டர் வண்டியில் மீட்டு குரும்பூரில் உள்ள லூசியா பள்ளியில் தங்க வைக்க ஏற்பாடு செய்து மட்டும் அல்லாது தொடர்ந்து காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் தொடர்ந்து ஒரு வார காலம் உணவளித்து ஒரு தாய், தந்தையை போல கவனித்துக் கொண்டார்கள்.
மேலும் இயல்பு நிலை திரும்பியதும் மக்களை சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைத்து கிராமங்களுக்கு செல்ல தடையாக இருந்த சாலைகளை உடனடியாக பழுது பார்த்து உதவினார். தொடர்ந்து அங்கமங்கலத்தில் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியபுரம், மயிலோடை, பரதர் தெரு, புது கிராமம், ராஜரத்தினம் நகர், குரும்பூர், முஸ்லிம் தெரு, கோடார்விளை, அருளானந்தபுரம், அங்கமங்கலம், ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட சுமார் 1865 குடும்பங்களுக்கும் தொடர்ந்து அரிசி, பருப்பு, ஆயில், மற்றும் மசாலா பொருட்களும், மேலும் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகளையும், மற்றும் சமையலுக்கு தேவையான பாத்திரங்களையும் தொடர்ந்து பல கட்டங்களாக வழங்கினார்.
மழை வெள்ளத்திலிருந்து மக்களை மீட்டு பாதுகாத்தது, பாதுகாப்பு முகாமிற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்கி “கண்ணை இமை போல” மக்களை பாதுகாத்து காப்பாற்றி இயல்புநிலை திரும்பியதும் இருப்பிடங்களுக்கு கொண்டு சென்று சேர்த்தது மட்டும் மல்லாது தொடர்ந்து மக்களுக்கு , மீண்டும்,. தேவையான அளவிற்கு நிவாரண உதவியை வழங்கி மக்களைக் காப்பாற்றி பாதுகாத்து வந்தமைக்கு , அரசு அதிகாரிகள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை மற்றும் பாராட்டையும் பெற்றுள்ளார். இந்த சிறந்த சேவையை பாராட்டும் வகையில் அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா பாலமுருகன். மற்றும் இதற்குத் உறுதுணையாக இருந்த கணவர் பாலமுருகனையும் ஏரல் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கி கவுரப்படுத்தினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பாக சேவை செய்ததற்காக பாராட்டு சான்றிதழ் பெற்ற அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா மற்றும் உறுதுணையாய் இருந்த அவரது கணவர் பாலமுருகனை அரசு அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும், அப்பகுதி பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


