தாமிரபரணி ஆற்றன் கரையில் வீரவநல்லூரில் பிறந்து இன்று சென்னை எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி வருபவர் டாக்டர் சுதாசேசய்யன். இவர் பொருநையை போற்றுதோம் என்ற தலைப்பில் கடந்த 5 வருட காலமாக வெள்ளிகிழமை தோறும் தினமலரில் கட்டுரை எழுதி வருகிறார். இவர் தாமிரபரணி கரையின் பெருமையை தொடர்ந்து இந்த உலகத்திற்கு கூறி வருவதால் அவரைப்பற்றி இந்த தொடரில் கூறுவது அவசியம் என நினைக்கிறேன்.
அவர் என்னுடைய நூலை மேற்கோள் காட்டி அவரது கட்டுரையில் பல இடங்களில் எழுதியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தி. தமிழ் திசை இந்த பத்தரிக்கையில் எழுதிய ஒரு கட்டுரையில் தமிழகத்தில் உள்ள 10 ஆன்மிக எழுத்தாளர் வரிசையில் என்னையும் பட்டியலிட்டு காட்டியிருந்தார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் முன்னாள் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்னு அவர்கள் தாமிரபரணி தடயங்கள் என்னும் நூலை ஆங்கிலத்தில் ஆசிரியராக இருந்து உருவாக்கிய போது, நாங்கள் எல்லாம் அவருக்கு துணையாக பணியாற்றினோம். அந்த சமயத்தில் அந்த நூலுக்கு முன்னுரை கொடுத்தவர் டாக்டர் சுதா சேசய்யன்.
இவர் இந்த நூலில் முன்னுரையாக என்ன எழுதியிருக்கிறார் என்பதை காணலாம்.
தாமிரபரணி வசீகரிக்கும் தன் அருகில் வரும், அல்லது நதியின் கரையோரமாக அலைந்து திரிபவர்களையோ அல்லது தொலைதூரத்தில் எங்கிருந்தாலும் அவளை நினைத்துப் பார்க்கும் அனைவரையும் மயக்குகிறது. பண்டைய வரைபட வியலாளர்களால் தம்பபன்னி, தம்ரோபேன் மற்றும் தம்பபேன் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. தென் தமிழ்நாட்டின் 128 கிமீ நீளமுள்ள வளைந்த நதியை பற்றி பண்டைய தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. நம்மாழ்வார் தாமிரபரணியை பொருநல் என்றும், கம்பர் “புனல் பெருகும் பொருநை” என்றும் பேசினார். கிரேக்கருக்கு, அவள் தனிமையானவள். முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டு சீவலப்பேரியை சுற்றியுள்ள பகுதியை “தண் பொருந்தம்” என்று குறிப்பிடுகிறது. தண் என்பது தமிழில் குளிர் என்ற அர்த்தம் பெறுகிறது. அதாவது தாமிரபரணி நீர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தின் குளிர்ச்சி யான தன்மையைக் குறிக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,000 அடி உயரத்தில் தனது பயணத்தைத் தொடங்கி, பொதிகை மலைகள் வழியாகச் செல்கிறது தாமிரபரணி. அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, அரியநாயகிபுரம், சுத்தமல்லி, திருநெல்வேலி, மருதூர், மணக்கரை, ஆதிச்சநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் சறுக்கி, கடலர சனான வங்காள விரிகுடாவில் புன்னக்காயலில் சேர்கிறது. பொதிகை மலைகளின் முக்கோண எழுச்சி பெரும்பாலும் தெற்கு கைலாசம் அல்லது சிவனின் ஒளியின் மலை (சிவஜோதிபர்வதம்) என்று விவரிக்கப்படுகிறது. அசம்பு மற்றும் பொதிகை மலைகள் அகஸ்திய முனிவரின் நிரந்தர வசிப்பிடமாக கருதப்படுகின்றன.
“தாமிரபரணியின் தடங்கள்” என்னும் இந்த நூல் நதி மற்றும் அதன் பகுதியின் அனைத்து பெருமைகளையும் திறம்பட உள்ளடக்கியது. இந்த நூலில் உள்ள புகைப்படங்கள் தாமிரபரணியின் அழகிய தன்மையை பிரதி பலிக்கின்றன. நதியுன்னி அணைக்கட்டு, முண்டந்துறை மற்றும் கன்னடியன் கால்வாய் போன்றவற்றின் கதைப் பதிவுகளில் கவனம் செலுத்தியிருப்பது மன நிறைவைத் தருகிறது. தாமிர பரணியில் தங்கியிருப்பவர் பல கதைகள், புனைவுகள், மரபுகள் மற்றும் வசீகரங்களுடன் வாழ் கிறார்கள். “தாமிரபரணியின் தடங்கள்” மகிழ்ச்சியாகவும், வசீகரமாகவும் இருப்பது இயற்கையானது.
என்று டாக்டர் சுதா சேஷய்யன் தன்னுடைய முன்னு ரையில் குறிப்பிட்டு இருந்தார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை நான் அன்புத்தம்பி ஊடகவியாளர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் மூலமாக கோரியிருந்தேன். அவர் அடிக்கடி அம்மாவை சந்தித்து வருபவர். எனவே அவர் வரலாற்றை வாங்கி தர ஏற்பாடு செய்துவருகிறார். இதற்கிடையில் தினமணியில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக தாமிரபரணி கட்டுரையை எழுதி வருகிறாரே. தினமணிக்கு இவருக்கும் தொடர்பு என்ன? அவரை தினமணியில் எழுதிய கட்டுரையில் என்ன கூறியிருக்கிறார் என காணுவோம்.
தினமணியுடனான என்னுடைய தொடர்பு, என்னுடைய பள்ளிப் பருவத்தில் தொடங்கியது. அப்போதெல்லாம், நாள்தோறும் செய்தித்தாள்களை வாசிப்பது என்பது, தங்கள் குழந்தையின் ஆளுமையை வளர்க்கும் என்று பெற்றோர்கள் நம்பினார்கள். அப்படித்தான் எனக்கும் தினமணி பழக்கம் தொற்றிக் கொண்டது; இன்றுவரை தொடர்கிறது.
தினமணியில் என்னை முதலில் ஈர்த்தது, செய்திகளும் பத்திகளும் கொடுக்கப்படுகிற அடர்த்தி.
இதழைத் திறந்தாலே, வரி பிசகாமல் புள்ளி வைத்து நெளி மாறாமல் இழை இழுத்த நம்மூர்க் கோலம் போன்ற கண்ணை உறுத்தாத, வாசிப்பைச் சிதைக்காத கம்பீரமான அந்த அடர்த்தி வசீகரிக்கும். அடுத்தது, தலையங்கப் பக்கத்தில் வெளியாகும் கட்டுரைகள். பல்வேறு விஷயங்கள் குறித்து பல்வேறு நபர்கள் எழுதுகிற கட்டுரைகள். என்று கூறிவிட்டு அவர் மேலும் கூறிய தகவல்கள் நம்மை ஆச்சரியப்பட வைத்தது.
( நதி வற்றாமல் ஓடும்)


