தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை படியும் உதவி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட சிறப்பு குழந்தை ஒருங்கிணைப்பாளர் ஆலோசனையின் படியும்
( 7. 2 .2023) அன்று சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் ஆர்சி நடுநிலைப்பள்ளி செய்துங்க நல்லூரில் வைத்து நடைபெற இருக்கிறது .எனவே தலைமை ஆசிரியர்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள இதுவரை அடையாள அட்டை பெறாத சிறப்பு குழந்தைகள் மற்றும் உதவித்தொகைகள் பெறாத சிறப்புக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை தவறாமல் இந்த மருத்துவ முகாமில் Medical Camp ல் கலந்து கொள்ள ஏற்பாடு செய்திட வேண்டும். அவர்களுக்கு தனியே பேருந்து வசதியும் செய்யப்படும் .மதிய உணவு,பயணப்படி வழங்கப்படும். இதற்காக சிறப்பாக மருத்துவர்கள் வர இருப்பதால் தவறாமல் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உதவிகளையும், உபகரணங்களையும் பெற்றுச் செல்ல உங்கள் குடியிருப்புப் பகுதிகளில் (0-18 )வயது வரை உள்ள அனைத்து சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு தலைமை ஆசிரியர்களை கனிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் .மருத்துவ முகாமில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக சிறப்பு குழந்தைகளுக்காக பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நமது கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள1. சாரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பேருந்து? கலியாவூர், வல்லநாடு, வசவப்பபுரம், அனைவரதநல்லூர் , செய்துங்கநல்லூர் வழியாகவும் 2.மீரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பேருந்து ராமானுஜம் புதூர் சேர குளம், தாதன்குளம், கருங்குளம் வழியாகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே தலைமை ஆசிரியர்கள் அனைவரும் உதவிகள் பெறவேண்டிய சிறப்பு குழந்தைகள் இந்த மருத்துவ முகாமில் தவறாது கலந்து கொண்டிட செய்திட வேண்டும்


