தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (05.01.2024) பரவலாக நல்ல மழை பெய்து வருவதாலும் நாளை (06.01.2024) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்என மாவட்ட ஆட்சியர் திரு கோ. லட்சுமிபதி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


