கடந்த 2023 வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய வீட்டு மானியத்தின் அடுத்த தவணைத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவைகுண்டம் பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் ரா.உச்சிமகாளி ராமகிருஷ்ணன் தலைமையில் கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “கடந்த 2023 டிசம்பர் 17-ம் தேதி பெய்த பெரும் மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்தோம் வெள்ளத்தில் வீடுகளை இழந்த எங்களுக்கு 2024-ல் தமிழக அரசு வீடு கட்ட அரசாணையை வழங்கியது.
அதன் அடிப்படையில் திருவைகுண்டம் பேருராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு 49 வீடுகள் வழங்கப்பட்டது. அரசாணையை பெற்ற நாங்கள் கடன் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தோம். 1 வருட காலம் கழித்தும் தவனைத்தொகை கிடைக்காததால் திருவைகுண்டம் பேரூராட்சியில் நிண்ட கோரிக்கை மற்றும் போரட்டத்திற்கு பிறகு முதல் தவணை தொகையை பெற்றோம். இனி அதை தெடர்ந்துவந்து தவணைதொகை வந்துவிடும் என்று அதிகாரிகள் கூறிய வாக்குறிதியின் அடிப்படையில் மீண்டும் கடன் வாங்கி வீடு கட்டினோம்.
அடுத்த கட்ட தவணைத்தொகை வராததால் 03/12/2025 அன்று திருவைகுண்டம் பேரூராட்சியில் மனுவினை அளித்தும் தவனைத்தொகை பெறத்தால் வீடு கட்ட முடியாமலும், குடியிருக்க வீடு இல்லாமலும் மற்றும் பெற்ற கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமலும் சிரமத்தில் உள்ளோம் அதலால் தாங்கள் சமுகம் எங்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் மிதமுள்ள தவணைத்தொகையை பெற்று தரும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


