தூத்துக்குடி சிவன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றி வழிபாடு நடந்தது. சுவாமி – அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் இரவில், வீடுகள்தோறும் அகல் விளக்கு தீபம் ஏற்றுவதும், கொழுக்கட்டை தயார் செய்து படைத்து வழிபடுவதும் வழக்கம் ஆகும். இந்த ஆண்டுக்கான திருக் கார்த்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு நேற்று மக்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளால் அலங்கரித்தனர். கொழுக்கட்டை, புட்டு போன்றவை செய்து சுவாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சொக்கப்பனை தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. அதே போன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் நேற்று இரவு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாரணை செய்து சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. பூஜைகளை சிவன் கோயில் தலைமை பட்டர் செல்வம், சண்முகம் பட்டர் ஆகியோர் செய்தனர்.
இதில் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஏசி செந்தில்குமார், சிவன் கோயில் அறங்காவல குழு தலைவர் கந்தசாமி, திமுக மாவட்ட பிரதிநிதி அனல் சக்திவேல், சிவன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் பி எஸ் கே ஆறுமுகம், மாரியப்பன், திமுக வட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் சதீஷ்குமார், கங்கா ராஜேஷ், சோமு, அதிமுக இளைஞர் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பில்லா விக்னேஷ், தூத்துக்குடி பொற்கிழி ஜான்சன் தேவராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு யுவன் சங்கர், மாவட்ட இந்து முன்னணி ராகவேந்திரா, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


