திருச்செந்தூா் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. நேற்று விடுமுறை என்பதாலும், ஐயப்ப பக்தா்கள் சீசன் என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். அவா்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.


