அயர்லாந்தில் பிறந்த டோனாவூர் ஏமி கார்மைக்கேல் அம்மாவை பற்றி நிறைய எழுத இருக்கு. இருப்பினும் அவர்கள் கல்லறை பற்றி சிலவை குறிப்பிடலாம் என்று தோன்றியது.
கிறிஸ்தவர்களுக்கும் அவர்கள் கல்லறைக்கும் நிறைய கதைகள் உண்டு. கிறிஸ்தவர்களை கட்டி போடும் இடம் மட்டுமல்ல, கல்லறை ஒரு பெரும் வியாபார தளம் ஆகும். தற்போது கல்லறைகள் அவர்கள் வசதி மற்றும் இனத்தை சொல்லும் இடத்தில் வந்து விட்டது. மலையாளத் திரைப்படத்தில் கிறிஸ்தவர்கள் பெட்டி கல்லறை வைத்தே ஒரு திரைப்படம் வந்தது.
கல்லறைத் திருநாள் நவ 2 என்பதால் நானும் கல்லறை நினைவில் இருந்தேன். பொதுவாக கிறிஸ்தவர்கள், உயிரோடு இருக்கும் போதே உணர்வு பூர்வமாக கல்லறைக்குள் வாழ்கிறவர்கள்.
பண்ணவிளைக்கு கிறிஸ்தவ மதம் சார்ந்து வந்தவர். அன்றைய இங்கிலாந்து அரசியின் உதவியுடன் டோனா ஊரில் 400 ஏக்கர் இடம் வாங்கி புறக்கணிக்கப் பட்ட பெண்கள், கணவரை இழந்த பிள்ளைகள், வறுமையில் வாடும் பிள்ளைகள், குழந்தைத் திருமணம் , கோவிலில் தேவர் அடிகளாக விடப்படுவதால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்காக வீடுகள் அமைத்தவர்.
வெள்ளைக்கார அரசின், அன்றைய பெயர் பெற்ற , குற்றவாளி வடலிவிளை செம்பு லிங்கங்கத்தை ஆங்கில அரசு அதிகாரிகளின் கட்டளைகளையும் மீறி பாளை சிறைச்சாலையில் சந்தித்து வந்தவர். பின்பு செம்புலிங்கம் வேண்டுதலுக்கு இணங்க அவரின் இரு பிள்ளைகளை பாதுகாத்து வந்தார்.
தனது 60 வது வயது வரை சமூக சேவை, புத்தக வாசிப்பு, எழுத்து என வாழ்ந்து வருகையில் கீழே விழுந்ததால் எலும்பு முறிந்து 20 வருடம் படுக்கையில் இருந்து 80 வது வயதில் மரணத் தருவாயில் தனக்கு கல்லறை வேண்டாம் , கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ஆடம்பர பெட்டி இல்லாது தன்னை ஒரு பழைய துணியில், எளிமையாக மண்ணில் புதைக்க கூறி சென்றார்.
பறவைகளை அவர் நேசிப்பவராக இருந்துள்ளதால் பறவைகள் நீர் அருந்தும் வண்ணம் ஒரு கல் கிண்ணம் அவர் அடையாளமாக அவர் சேவை நிறுவனத்தவர்கள் வைத்து உள்ளனர் .
அவர்கள் உருவாக்கிய கட்டிடக்கலை கேரளா ஜப்பான் கலந்த தனித்துவமானது. யாராவது சென்று பார்க்க விரும்பினால், donavoor felloship என்ற இந்த எண்ணை +91 80125 12123 தொடர்பு கொண்டு சென்று வர இயலும்.


