தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/17 ஆய்வுப் பயணத் திட்டத்தின் கீழ் 83வது தொகுதியாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையாவின் தொகுதியில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து 90வது தொகுதியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவனின் தூத்துக்குடி தொகுதியில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


