தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான பட்டமளிப்புவிழா இன்று கல்லூரிக் கலையரங்கில் வைத்து நடைபெற்றது.
விழாவிற்குக் கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு வரவேற்புரை வழங்கினார். பெங்களூரு இஸ்ரோ ஆதித்யா-L1, திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி மாணவ மாணவியர்களுக்குப் பட்டம் வழங்கி சிறப்பித்தார். அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் 616 மாணவ மாணவியர்களும், அரசு உதவி பெறாத பாடப்பிரிவில் 292 மாணவ மாணவியர்களும் மொத்தம் 908 மாணவ மான்ணவியர்கள் நேரில் பட்டம் பெற்றனர்.
இதில் பல்கலைக்கழக அளவில் 1 மாணவர் தங்கப்பதக்கமும் 23 மாணவ மாணவியர்கள் பல்கலைக்கழக தரவரிசையும் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர், வ.உ.சி. கல்லூரிக் கல்விக் கழக உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சியினைக் கல்லூரி நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.


