விளாத்திகுளம் அருகே புளியங்குளத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் விளாத்திகுளம் – குளத்தூர் சாலையில் 116ஆவது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50,க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை எம்எல்ஏ மார்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் 19 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதலாவதாக மெடிக்கல் விஜயகுமார் சண்முகாபுரம் மாட்டு வண்டியும், இரண்டாவதாக ரவி ஏ. எம். பட்டி மாட்டு வண்டியும், மூன்றாவதாக கணேசன் ஓட்டப்பிடாரம், தாவீது சக்கம்மாள்புரம் மாட்டு வண்டியும் வெற்றி பெற்றன. பின்னர் நடந்த பூஞ்சிட்டு பந்தயத்தில் 38 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கும் சாரதிகளுக்கும் பரிசுகள் மற்றும் ரொக்க பணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சமுதாயத் தலைவர் முருகன், செயலாளர் செல்வம், பொருளாளர் முத்துப்பாண்டி, துணைத் தலைவர் சுரேஷ்குமார் உட்படவிளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் கூடி நின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.


