தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் எடப்பாடி அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
தமிழ்நாடு மட்சுஷிமா கராத்தே அமைப்பு மற்றும் தூத்துக்குடி ஈசி பிட்னஸ் அகாடமி இணைந்து நடத்திய மாநில அளவிலான 28வது மட்சுஷிமா ஹியாகுஷின் கைஹான் கராத்தே போட்டிகள் தூத்துக்குடி மில்லர்புரத்தில் நடைபெற்றது. 60 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழ்நாடு முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை உமா ஜீவல்லா்ஸ் உாிமையாளா்கள் சரவண ராஜா, பிரதீப்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், ஒட்டு மொத்தமாக எடப்பாடி அணியினர் 14 பிரிவுகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். சாம்பியன் ஆப் சாம்பியன் இறுதி போட்டியில் எடப்பாடி வீரர் சின்னதுரை வெற்றி பெற்றார்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி ஈசி பிட்னஸ் அகாடமி பயிற்சியாளர் இம்மானுவேல் வரவேற்றார். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரிஜினல் மேலாளர் ஆனந்த், பிஎம்சி பள்ளிகள் நிர்வாகி ஜோசப் ஜான் கென்னடி ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சின்னதுரை அன்கோ சார்பில் டிராவல் பேக் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் சென்சாய் அருள்மொழிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில், தொழிலதிபர்கள் சிவா, முகமது இப்ராகிம், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈசி பிட்னஸ் அகாடமி கராத்தே பயிற்சியாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


