புதூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 100- கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்வில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திலகா, மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி, ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, ராதா கிருஷ்ணன், பேரூராட்சி மன்ற தலைவர் வனிதாஅழகுராஜ், பேரூர் கழகச் செயலாளர் மருது பாண்டியன், வார்டு உறுப்பினர்கள் வெற்றிவேலன், தினகரன், அங்காள ஈஸ்வரி, சூரியகலா, உமாராணி, மாலையம்மாள், சித்ரா தொழிலதிபர் வாசுதேவன், இளைஞர் அணி தங்கமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி புதூர் ராஜு, விளாத்திகுளம் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


