சாத்தான்குளம் அருகே நொச்சிக்குளத்தில் புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழாவில் சப்பர பவனி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நொச்சிக்குளத்தில் புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கடந்த செப். 20இல் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. நாள்தோறும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா் நடைபெற்றது. 9ஆம் நாள் மாலை சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை பவனி, இரவில் புனித மிக்கேல் அதிதூதா் சப்பர பவனி நடைபெற்றது.
10ஆம் நாள் காலையில் சாத்தான்குளம் வட்டார முதன்மைகுரு ஜோசப் ரவிபாலன் தலைமையில் திருவிழா திருப்பலி, திருமுழுக்கு நடைபெற்றது. மாலையில் தோ் பவனி, இரவில் நற்கருணை ஆசீா் நடைபெற்றது. திருவிழாவில் ‘ஞானசௌந்தா்’ தொடா் நாடகம் 3 நாள்கள் நடைபெற்றது. திருவிழா நிறைவு நாளான்று கொடியிறக்கம், இரவில் சிறப்பு அசன விருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்குத் தந்தை ரத்தினராஜ் தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.


