விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை – தாம்பரம் இடைய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லையில் இருந்து இன்று (4-ந்தேதி) இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06040) மறுநாள் காலை 11.25 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் நேற்று (3-ந்தேதி) இரவு தாம்பரத்தில் இருந்து நெல்லை இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.