தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் செல்பி பாயிண்ட்டில் எழுத்துக்களை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துநகர் கடற்கரையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், கடற்கரையினை சுற்றி பார்க்கவும், பொழுது போக்காகவும் வந்து செல்கின்றனர். தூத்துக்குடியின் பல்வேறு பகுதியில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர்.
பூங்காவிற்கு வரும் மக்கள் தங்களை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட்டில் செல்பி எடுத்துச் செல்கின்றனர். இந்த செல்பி பாயிண்ட்டில் உள்ள I Love Tuty எனும் எழுத்தில் T எனும் எழுத்து நீண்ட நாட்களாக இல்லாமல் இருந்து வருகின்றது. அதனை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.