கருங்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடி 18 பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது.
ஆடி 18 ஆம் பெருக்கை முன்னிட்டு கருங்குளம் குலசேரக நாயகி சமேத மார்த்தாண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன் பின் மக்கள் சிவன் கோயிலில் இருந்து சீதன பொருள்களை தாமிரபரணி ஆற்றுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து கருங்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் வைத்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. தாமிரபரணி நதிக்கும் சிறப்பு அபிசேகம், பூஜை நடந்தது. விவசாயம் செழிக்க, தாமிரபரணி நதிக்கு சிறப்பு ஜெபம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குணசேகரன் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
_


