தூத்துக்குடியில் ரூ. 20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன பேருந்து நிறுத்தத்தைக் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார் .
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டையாபுரம் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு காலனியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2023 – 2024 நிதியின் கீழ் ரூ. 20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன பேருந்து நிறுத்தத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விழாவில்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


