கருங்குளத்தில் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார அளவிலான பொதுக்கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார அளவிலான பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கருங்குளம் வட்டார கிளையின் வட்டார பொதுக்குழு தலைவர் சக்தி தலைமை வகித்தார். வட்டார செயலாளர் லூயிஸ் பூபாலராயன், வட்டார பொருளாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வட்டார தேர்தலில் அனைவரும் பங்கெடுத்து சிறப்பாக நடத்துவது, கருங்குளம் வட்டார கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோத நோக்கத்தினை கண்டித்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் ஆசிரியர்களை மரியாதையுடன் அலுவலக பணியாளர்கள் நடத்திட வேண்டியும் தீர்மானங்கள் பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், கல்வி மாவட்ட செயலாளர் எபனேசர், மாவட்ட துணைச் செயலாளர் பவுல் ஆபிரகாம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி உள்பட கலந்து கொண்டனர்.


