கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை துவம்சம் செய்த மழை – வெள்ளத்தின் துயர நினைவுகள் இந்நூலில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. செய்தியாளராகப் பணியாற்றிய இந்நூலின் ஆசிரியர், மழை வெள்ளம் பாதித்த பகுதிகள் ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் சென்று, தான் பார்த்த அவலக் காட்சிகளை பதைபதைக்கும் வகையில் பதிவு செய்து இருக்கிறார். இதனைப் படிப்பவர்கள் அனைத்து நிகழ்வுகளையும் நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும் வகையில் அவற்றை விவரித்து இருக்கிறார். கோவில்கள், வீடு கள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதையும், மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உதவி செய்யப்பட்டதும், திருச் செந்தூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வெள்ளத்தில் சிக்கித் தவித்ததும், அதில் இருந்த பயணிகள் அடைந்த வேதனையும் உள்பட அனைத்தும் வரலாறு
மறி எனும் மழை வெள்ளம் போலத் தரப்பட்டு இருக்கின்றன. (ஆசிரியர்: காமராசு செல்வன்; வெளியீடு: பொன்சொர்ணா; விலை: 330; phone : 87609 70002)


