தூத்துக்குடி, மேல சண்முகபுரத்தை சேர்ந்த பால் தங்க ஜெபராஜ் ரெயில்வே ஊழியரான இவர் புதிதாக கட்டிய வீட்டில் கிரக பிரவேச விழா நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற பால் தங்க ஜெபராஜ், சாமியானா பந்தலின் இரும்பு பைப்பை தொட்டார். அப்போது மின்சார ஒயர் மூலம் அந்த இரும்பு குழாயில் பரவி இருந்த மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


