தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலை தென்னகத்து தில்லை என்றும், திருவண்ணாமலையை போல கார்த்திகை திருவிழா நடைபெறுவதால் தென்னக திருவண்ணாமலை என்றும், வடமுகமாக வாய்க்கால் -ஓடுவதால் தட்சண காசி என்றும். திருவரங்கம் கோயில் உள்ள காரத்தினால் தென் திருவரங்கம் எனவும் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் சிதம்பரத்தினை போலவே மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டில் நேற்று கொடிபட்டம் செய்துங்கநல்லூர் பஜாரில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இன்று அதிகாலை காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. அதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கும் நந்தி பகவானுக்கும் பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெருங்குளம் செங்கோல் மடம் 103 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் மாரியப்பன், கட்டளை தாரர் முத்துசாமி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்துகொண்டனர். அர்ச்சகர்கள் வெஙகடாசலம் வாத்தியர், முத்துராமன், பாலசுப்பிரமணியன் தலைமையில் அர்ச்சகர்கள் யாக பூஜை நடத்தினார்கள். பக்தர்கள் சார்பில் பஞ்ச வாத்தியங்கள் முழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் , வி.கோவில் பத்து ஸ்ரீ பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆன்மீக பேரரவை செய்திருந்தது. விழாவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள். வருகிற 13 ந்தேதி வரை தினமும் பத்து நாளக் காலையும் மாடைலயும் யாசாலை பூஜைகளும் சுவாமி திருவீதி உலா எழுந்தருளும் வைபவமு திருநடன தீபாராதனை தரிசனமும் நடைபெற உள்ளது. 13 ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.


