எனது ஊரான பன்னம்பாறையில் சாத்தன் சாம்பவர் கட்டிய கல்மண்டபம் உள்ளது.. ஏற்கனவே நான் , இமயவரம்பன் அவர்கள் , ஜக்கோர்ட் பாண்டியன் அவர்கள் மற்றும் பலர் இணைந்து அதே மண்டபத்தில் சுமார் 4ஆண்டுகளுக்கு முன்பாக அங்கே ஆய்வு செய்துள்ளோம்.நாங்கள் சென்ற இடம் காட்டுப்பகுதியில் இருந்தாலும் , அந்நேரம் அதிக அளவு மழை பொழிந்ததாலும், . மேற்கொண்டு கல்மண்டபம் உள்ளே சென்று போட்டோ வீடியோ எடுக்காமல் வெளிப்பகுதியில் வைத்து, Facebook Live (சேனாதிபதி இமயவரம்பன்) மட்டும் போட்டு 10நிமிடங்கள் மட்டுமே அங்கு நின்று மழையின் காரணமாக சீக்கிரமே அங்கிருந்து வந்து விட்டோம். காலங்கள் கடந்தன. நேற்று எனது வீட்டில் ஓய்வு எடுக்கும் சமயத்தில் திடீரென அந்த இடம் குறித்த நியாபகம் வர, அந்த இடம் நோக்கி தனியாகவே சென்றேன். உள்ளே சென்று பார்த்தால் மண்டபமே தெரியாத அளவுக்கு முட்செடிகளும் புதர்களும் வளர்ந்துள்ளது. சரி கொஞ்சம் சுத்தம் செய்து விட்டு உள்ளே சென்றேன். அங்கு இரண்டு தூணில் இரண்டு சிலையும் 2 சிறிய அளவிலான கல்வெட்டுகளும், ஒரு நீண்ட கல்வெட்டும் கண்டறிந்தேன்.
அவற்றை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சேமித்து கொண்டேன், அதன் மீதான படியெடுக்கும் செயலை தொடர்ந்து இந்த எதிர்வரும் நாட்களில் செய்ய இருக்கிறேன். கல்வெட்டை படித்து பின்னர் அதன் செய்திகளை சொல்கிறேன்.அதன் முதல் வரி குலசேகரம், உ குலசேகர பாண்டியன், குலசேகரம் ஆகியவை ஆகும், ஏற்கனவே நாம் அறிந்த படி , சாத்தான் சாம்பவர் (குறுநில மன்னர் மற்றும் ஜமீன்தார்) , குலசேகரன்பட்டினம் (குலசை) பகுதியை ஆட்சி புரிந்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் மன்னரும் நீண்ட நெடிய நட்பை கொண்டவர்கள். இந்த கல்மண்டபம் குலசை ரஸ்தா எனப்படும் குலசைக்கு செல்லும் பாதையில் வழிப்போக்கர்கள் தங்கவும், பசியாறவும் நம் மன்னர் ஏற்படுத்திய இடமாகும். இங்கு சாதம் வழங்க தொட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது, அதுவும் இப்போது காண முடிகிறது. இதை சுற்றி பல்வேறு நிலையில் இடிந்த தூண்கள், விளக்கு வைக்க கூடிய கல்லால் ஆன பெரிய விளக்குகள் இப்போதும் இருக்கின்றன. அடுத்த ஆய்வு சாத்தான் சாம்பவர் வணங்கிய, 3முக்கிய கோவில்கள் மற்றும் தினமும் வழிபாடு செய்த வன்னிய ராஜா வீரசாம்பான் திருக்கோவில்.


