தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி பள்ளி வளாகங்கள், சாலையோரங்கள், கடற்கரை, ஓடை இருபுறம், ஆற்றின் ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் 50,000 பனை விதைகள் நடும்பணியின் தொடக்க விழா 31.10.2025 வெள்ளிக்கிழமை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையிலும், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் முனுசாமி மற்றும் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, முன்னிலையிலும், முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிதம்பரநாதன், மாவட்டக் கல்வி அலுவலர் இரவீந்தரன். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவபிரசாத், மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஹசீனா பானு. முதல்வரின் பசுமைத்தூதர் சங்கீதா. ஒருங்கிணைப்பாளர் சுடலைமணி, தூத்துக்குடி வட்டாட்சியர் உட்பட பல அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பள்ளி வளாகத்தில் 145-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன. இந்த நிகழ்வினை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், வனத்துறை, மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஆகியவை இணைந்து செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இராமசாமி மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மாலதி ஆகியோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் வனத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக பள்ளியின் தலைமையாசிரியர் எலியாஸ் மற்றும் பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவண குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


