நாளொன்றுக்கு சராசரியாக ரூ. அஞ்சு புள்ளி ஆறு கோடி வரை நன்கொடை அளித்து இந்திய நன்கொடையாளர் பட்டியலில் ஷிவ் நாடார் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியல் மற்றும் இந்திய நன்கொடையாளர் பட்டியல் போன்றவற்றை எடல்கிவ் ஹுருன் இந்தியா அமைப்பு வெளியீட்டு வருகிறது. இந்நிலையில் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஷிவ் நாடார் ஆண்டுக்கு ரூ.2042 கோடி நன்கொடைகள் வழங்கி முன்னணி இந்திய நன்கொடையாளராக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துள்ளார் என்று ஹுருன் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ. 5.6 கோடி வரை நன்கொடை அளித்துள்ளார் 78 வயதான அவர் ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் இதில் பெரும்பாலான தொகை கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது. 2வது இடத்தில் விப்ரோ நிறுவனர் அஷிம் பிரேம்ஜி கல்வி தொடர்பான காரணங்களுக்காக ரூ.1774 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.376 கோடி நன்கொடை அளித்து 3 வது இடத்தில் உள்ளார். ஆதித்ய பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா ரூ.287 கோடி நன்கொடை அளித்து நாலாவது இடத்தை பிடித்துள்ளார் அதானி குடும்பத்தின் தலைவரான கவுதம் அதானி 2022 ம் ஆண்டிலிருந்து கல்விக்காக ரூ.285 கோடி நன்கொடை அளித்து தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


