தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது இதனால் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர் இதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும் அதன்படி தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்ட்ரல் நெல்லை இடையே (நவ 8,15,22) ஆகிய மூன்று நாட்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11 15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 11 45க்கு நெல்லை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நெல்லை சென்ட்ரல் இடையே (நவ 9,6,23) ஆகிய மூன்று நாட்களில் நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3 45க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது செங்கல்பட்டு விழுப்புரம் திருச்சி மதுரை விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது. தற்போது இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.


