ரிலையன்ஸ் அறக்கட்டளை தகவல் சேவை என்ற திட்டத்தின் மூலம் கால்நடை விவசாயிகளுக்கு பல்வேறு தகவல்களை தொழில்நுட்பங்கள் மூலம் வழங்கி வருகிறது. குறிப்பாக மழை மற்றும் வெயில் காலங்களில் கால்நடை பராமரிப்பு, நோய் மேலாண்மை, தீவன மேலாண்மை, தடுப்பூசியின் முக்கியத்துவம் போன்ற தகவலைகளை வாய்ஸ் மெசேஜ், கட்டணமில்லா அலைபேசி எண் , வாட்ஸாப், டயல்அவுட் கான்பெரென்ஸ் ஆகியவை மூலம் வழங்கி வருகிறது. மேலும் கால்நடை விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் குடல் புழு நீக்க மருந்து கொடுத்தல், கால்நடை மருத்துவ முகாம் நடுத்துதல் போன்ற செயப்பாடுகளையும் செய்து வருகிறது. கால்நடைத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டயல்அவுட் கான்பெரென்ஸ் மூலம் விவசாயிகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நடத்த்ப்பட்டது. அரசு கால்நடை மருத்துவர் அந்தோணிராஜ் கால்நடை திட்டங்கள் குறித்து விளக்கிக்கூறினார். கருங்குளம் மற்றும் திருவைகுண்டம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.


